மெட்டி ஒலி சீரியல் செல்வம் ஞாபகம் இருக்கா? இப்போ எங்கே எப்படி இருக்கிறார் தெரியுமா?

3 years ago 699

சன் டிவியில் ஒளிபரப்பாகி பிரபலமான சீரியல் மெட்டி ஒலி. திருமுருகன் இயக்கத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு ஒளிபரப்பான இந்த சீரியல் இன்று வரை ரசிகர்களால் ரசிக்கும்படி உள்ளது. தற்போதும் கூட இந்த சீரியல் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

இந்த சீரியலில் செல்வம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது வீட்டில் செல்லப் பிள்ளையாக மாறியவர் விஸ்வநாதன் மெட்டி ஒளி மூலம் கிடைத்த புகழை அடுத்து பொன்னூஞ்சல் என்ற சீரியலில் நடித்தார்.


அதன் பின்னர் வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்தார். ஆனால் சின்னத் தேவதையைப் போல வெள்ளித்திரையில் புகழும் வாய்ப்புகளும் அமையவில்லை. ‌‌ இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளான்.

தற்போது கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது. தற்போது வரை பார்ப்பதற்கு அதே இளமையோடு அப்படியே இருக்கிறார் என்பதுதான் ஆச்சரியம்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...