மெட்டி ஒலி சீரியல் நடிகை காவேரியா இது.? ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டாரே!

3 years ago 469

தமிழ் சினிமாவில் வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை காவேரி. சில படங்களில் நடித்த இவர் பின்பு வாய்ப்பு இல்லாமல் சீரியலில் களமிறங்கி ரசிகர்களின் மனதினைக் கொள்ளை கொண்டார்.

குறிப்பாக இவர் நடித்த மெட்டிஒலி இன்றும் பேசப்பட்டு வருகின்றது. அதனைத் தொடர்ந்து மீரா, தங்கம் மற்றும் வம்சம் ஆகிய தொடர்களில் நடித்த இவருக்கு கடந்த 2013ம் ஆண்டு ராகேஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. பின்பு சீரியலுக்கு முழுக்கு போட்ட காவேரி பெங்களூரில் செட்டில் ஆனார்.


இந்நிலையில் சமீபத்தில் நடந்த மெட்டி ஒலி தொடரில் நடித்தவர்கள் Re-யூனியனுக்கு காவேரி வந்துள்ள காவேரியை பார்த்து அனைவரும் அ திர்ச்சியடைந்தனர். 

காரணம் உடல் எடையுடன் கொழு கொழுவென இருந்த அவர், உடல் எடை குறைந்து ஆளே அடையாளம் தெரியாத அளவில் காணப்படுகின்றார்.

இதனை அவதானித்த ரசிகர்கள் காவேரிக்கு என்ன ஆயிற்று, இவ்வளவு வயதாகிவிட்டதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க தன் உடல் எடை குறைந்ததை தொடர்ந்து பயந்து போய் நடிகை காவிரியே மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்துள்ளார்.

அங்கு அவரை ப ரிசோதித்த மருத்துவர்கள் உடலுக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்று கூறியுள்ளனராம். முன்பை விட தற்போது ஆரோக்கியமாக இருக்கும் காவேரி சின்னத்திரையில் நடிப்பதற்கு வாய்ப்பிற்காக காத்திருப்பதாக கூறியுள்ளார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...