மேக்கப் மூலம் விஜய் சேதுபதியாக மாறிய இளம் பெண்!

3 years ago 481

இளம் பெண் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி போன்று மேக்கப் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய் சேதுபதி. அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த இவர் தற்போது விக்ரம், துக்ளக் தர்பார், மாமனிதன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

ஹீரோ, வில்லன் என தன்னைத் தேடிவரும் கதாபாத்திரங்களை கச்சிதமாக செய்து முடித்து கைதட்டல்களை பெற்று, தனக்கான இமேஜை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார் விஜய் சேதுபதி. 

தற்போது முன்னணி தொலைக்காட்சியில் சமையல் நிகழ்சியை தொகுத்து வழங்கவிருக்கும் அவர், ஃபேமிலி மேன் வெப் சிரீஸ் இயக்குநர்களின் புதிய வெப் சீரிஸிலும் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் இளம் பெண் ஒருவர், விஜய் சேதுபதியை போன்றே மேக்கப் போட்டு, அச்சு அசலாக விஜய் சேதுபதி போலவே மாறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...