யோகி பாபு - ஓவியா படத்தோட டைட்டில் என்ன தெரியுமா?? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தகவல்

3 years ago 195

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. அஜித் விஜய் சூர்யா ரஜினி என பல முன்னணி நடிகர்களுடன் இவர் இணைந்து நடித்துள்ளார். தொடர்ந்து ஹீரோவாகவும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

 அந்த வகையில் அவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள திரைப்படத்தை ஸ்வதீஷ் என்பவர் இயக்குகிறார். இந்தப் படத்தில் யோகி பாபு உடன் இணைந்து ஓவியா நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

தற்போது இந்த திரைப்படத்திற்கு கான்றாக்டர் நேசமணி என டைட்டில் வைத்திருப்பதாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. 

இந்த போஸ்டரை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார் ஓவியா. 

இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...