ரகசியமாக முடிந்த நிச்சயதார்தம் - கீர்த்தி சுரேஷ் விளக்கம்..!

3 years ago 410
தமிழ் சினிமாவில் "இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இதனையடுத்து ‘ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சாமி 2’ என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். 
 

தமிழ் மட்டுமின்றி, சில தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். தெலுங்கில் இவரது நடிப்பில் வெளியான "மகாநடி" படம் கீர்த்திக்கு பேரும் , புகழும் பெற்றுத்தந்ததுடன் சிறந்த நடிகையாக அடையாளம் காட்டியது. 

 இந்த படத்திற்காக கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கி கௌரவித்தனர். அதன் பின்னர் மார்க்கெட்டின் உச்சத்தில் தொடர்ந்து இருந்து வருகிறார்.கீர்த்தி சுரேஷ் அவர் பாட்டுக்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். 
 

இந்நிலையில் அவருக்கு திருமணம் என்று அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றது. ஒவ்வொரு முறையும் மாப்பிள்ளை மாறிக் கொண்டே இருக்கிறார். இந்நிலையில் தான் கீர்த்தியின் திருமணம் குறித்து மீண்டும் தகவல் வெளியானது. 

 கீர்த்திக்கும் தொழில் அதிபர் ஒருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது, அவர்களுக்கு விரைவில் திருமணம் என்று தகவல் வெளியானது. இந்நிலையில் இது குறித்து பேட்டி ஒன்றில் கீர்த்தி சுரேஷ் விளக்கம் அளித்திருக்கிறார்.
 

என் திருமண செய்தியை பார்த்து எனக்கே ஆச்சரியமாக இருந்தது. எங்கிருந்து தான் இது போன்ற தகவல் எல்லாம் வெளியாகும் என்றே தெரியவில்லை. தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் ஐடியாவும் இல்லை, அதற்கு நேரமும் இல்லை.  

என்னை பற்றி வதந்தி பரப்புவதை விட்டுவிட்டு வேறு ஏதாவது நல்ல காரியம் செய்யலாம் என கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...