ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய மஞ்சு வாரியர்

3 years ago 357

மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் மஞ்சு வாரியர். இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற அசுரன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படத்தில் தனுஷின் மனைவியாக எதார்த்தமாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

இதையடுத்து மலையாளத்தில் பிசியான மஞ்சு வாரியர், மோகன்லாலுடன் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம், மம்முட்டியுடன் தி பிரீஸ்டு, நிவின் பாலியுடன் படவெட்டு என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில், மஞ்சுவாரியரின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 42 வயதான மஞ்சுவாரியரா இவர்? என்று நினைக்கும் அளவுக்கு மிகவும் இளமையாக உள்ளார். 

இன்றைய இளம் டாப் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் அந்த புகைப்படம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.




NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...