ரஜினி நடிப்பில் 800 நாட்களில் மேல் ஓடிய த்ரில்லர் படம்!

1 year ago 281

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக ஜொலிபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது இடத்தை பிடிக்க பலரும் போட்டி போடுகின்றனர்.

ஆனால் அவர்களுக்கு விட்டுக்கொடுக்காமல் ரஜினியும் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

இந்த நிலையில் ரஜினி நடிப்பில் வெளிவந்து அதிக நாட்கள் ஓடிய 5 திரைப்படங்கள் குறித்து தான் நாம் பார்க்க இருக்கிறோம்.

1. சந்திரமுகி : 2005 ஆம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க திரில்லர் காமெடி சென்டிமென்ட் ஆக்சன் என அனைத்தும் கலந்த ஒரு அற்புதமான படமாக இருந்ததால் மக்கள் மத்தியில் சமூக வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ரஜினி மனநல மருத்துவராக நடித்திருப்பார். அவருடன் இணைந்து நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, பிரபு, நாசர் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் அப்பொழுது வெளியாகி நல்ல ஹிட் அடித்தது மேலும் 890 நாட்கள் ஓடி பிரமிக்க வைத்தது.

2. பாட்ஷா : 1995 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் சென்டிமென்ட் கலந்த திரைப்படமாக உருவாகியிருந்தது. ரஜினி மும்பை தாதாவாக நடித்து அசத்தி இருப்பார். அவருடன் இணைந்து ரகுவரன், சரண்ராஜ், ஆனந்தராஜ், நக்மா மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர். இந்த படம் வெளிவந்து சுமார் 368 நாட்கள் ஓடியது.

3. படையப்பா : கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு உருவான திரைப்படம் படையப்பா.  உழைத்தால் முன்னேறலாம் என்பதற்கு இணங்க இந்த படம் உருவாகி இருக்கும் படத்தில் ரஜினியுடன் இணைந்து சிவாஜி கணேசன், சவுந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில் என பலர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்திருப்பார். இந்த படம் வெளிவந்து வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் 265 நாட்கள் ஓடி அசத்தியது.

4. பில்லா : 1980 ஆம் ஆண்டு ஆர் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க போலீஸ்காரர்களுக்கும் கடத்தல் காரர்களுக்கும் இடையே நடக்கும் சண்டையை தான் படமாக எடுத்திருப்பார். படம் வெளிவந்து அப்பொழுது அமோக வரவேற்பு பெற்றதுடன் மட்டுமல்லாமல் 260 நாட்கள் ஓடி வெற்றி கண்டது.

5. படிக்காதவன் : 1985 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் ராஜசேகர் இயக்கத்தில் உருவான திரைப்படம் படிக்காதவன். இந்த படம் அண்ணன் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தம்பி படித்து முன்னேற வேண்டும் என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்து காட்டிய திரைப்படம். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து சிவாஜி கணேசன் அம்பிகா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் வெளிவந்து 210 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...