ரஜினியின் "அண்ணாத்த" அடுத்த கட்ட ஷூட் எங்கே? எப்போ? .. விசில் பறக்கும் அப்டேட்!

3 years ago 633

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பற்றிய மாஸ் அப்டேட் தெரியவந்துள்ளது.

கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி, ஜார்ஜ் மரியன் மற்றும் பலர் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

முன்னதாக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் கடந்த டிசம்பர் மாதம் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி  நடந்துவந்தது. 

இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு சென்னையில் நடத்தத் திட்டமிடப்பட்டது. இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமெரிக்காவுக்கு ரிலாக்ஸ் பயணம் ஒன்றை மேற்கொண்டு நண்பர்களை சந்தித்து வந்தார்.

கடந்த வாரம்தான், இயக்குனர் பிரியதர்ஷனின் Four Frames Sound கம்பெனியில் 'அண்ணாத்த' படத்துக்காக டப்பிங் பேசும் பணிகளை ரஜினிகாந்த் தொடங்கியிருந்தார்.

இந்நிலையில் புதிய அப்டேட்டாக அண்ணாத்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் லக்னோ மற்றும் கல்கத்தா பகுதிகளில் நடப்பதாகவும், இந்த படப்பிடிப்புகள் இம்மாதம் 19-ஆம் தேதி வரை நடக்கும் என்றும் நம்பத்தகுந்த தகவல்கள் தெரியவந்துள்ளன. 

அதே சமயம் இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் போர்ஷன் இல்லாததால், அவர் பங்கேற்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது. 

இப்படத்தின் ரிலீஸ் 2021 தீபாவளி (4.11.2021) என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...