ராஷ்மிகா மந்தனா அடுத்த பட ஹீரோ யார் தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்

2 years ago 363

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 66 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

ராஷ்மிகா திரைப்பயணத்தில் விஜய்யுடன் நடிப்பது மிகப்பெரிய jackpot ஆக இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அவருக்கு ஒரு ஜாக்பாட் அடித்துள்ளது. அதாவது ராஷ்மிகா மந்தனா அடுத்ததாக பிரபாஸுடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய இயக்குனர் இயக்கத்தில் பிரபாஸ் அடுத்ததாக நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் தான் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

நடிகர் பிரபாஸ் தற்போது கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் சலார் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...