ரியல் ஹீரோவான மாதவன் மகன்.. நீச்சல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தல்!

3 years ago 269

வாரிசு நடிகர்கள் பிரச்சனை நாடு முழுவதும் தலைவிரித்து ஆடி வரும் நிலையில், சினிமாவில் திணிக்காமல் தனது மகனை அவர் விருப்பத்திற்கு ஏற்ப விட்டு விட்டார் நடிகர் மாதவன்.

நடிகர் மாதவனின் மகனான வேதாந்த் நீச்சல் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடி தற்போது வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.


நடிகர் மாதவனுக்கும் சரிதாவுக்கும் 1999ம் திருமணம் ஆனது. இருவருக்கும் வேதாந்த் எனும் மகன் உள்ளார். அப்பாவை போல சினிமா பக்கம் வராமல் மாதவனின் மகன் வேதாந்த் நீச்சல் விளையாட்டு துறையில் கலக்கி வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற லத்வியன் ஓப்பன் நீச்சல் போட்டியில் கலந்து கொண்ட வேதாந்த் மாதவன் இந்தியா சார்பில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கத்தை வென்று பெருமை சேர்த்துள்ளார். 

அந்த சந்தோஷமான விஷயத்தை நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வாழ்த்தி உள்ளார்.

மேலும், மாதவன் மகன் வேதாந்த்தின் நண்பனான சஜன் பிரகாஷ் முதலிடத்தை பிடித்து தங்கப் பதக்கத்தை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். 

200 மீட்டர் பட்டர்ஃபிளை நீச்சல் போட்டியில் முதலிடத்தையும் 100 மீட்டர் நீச்சல் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.

தனது மகன் மற்றும் மகனின் நண்பர்களான சஜன் பிரகாஷ், தனீஷ் ஜார்ஜ் மேத்யூ (வெண்கலப் பதக்கம்) உள்ளிட்ட மூவரையும் பாராட்டி உள்ளார் நடிகர் மாதவன். 

மேலும், இவர்களுக்கு பயிற்சி கொடுத்த பிரதீப் சார், பீட்டர் சார், சதீஷ் சார், முருகேஷ் சார் உள்ளிட்டோருக்கும் நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் நடிகர் மாதவனுக்கு மகாராஷ்ட்ராவை சேர்ந்த டி.ஒய். பட்டீல் கல்வி நிறுவனம் டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தது. 

அதன் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகின. மாதவன் இயக்கி நடித்து வரும் ராக்கெட்டரி திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...