ரேஷ்மாவுக்கு தந்தையர் தின வாழ்த்து தெரிவித்த மகன்: நெகிழ்ச்சி வீடியோ!

3 years ago 574

அனைத்து சிங்கிள் அம்மாக்களுக்கும் எனது தந்தையர் தின வாழ்த்துக்கள் என நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒருவருமான ரேஷ்மாவின் மகன் பதிவு செய்துள்ள வீடியோ அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது


விஷ்ணு விஷால் நடித்த ’வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ என்ற படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்த ரேஷ்மா, அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலம் ஆனார்.

இந்த நிலையில் சமீபத்தில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டதை அடுத்து ரேஷ்மாவின் மகன் ராகுல் சர்ப்ரைஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 


அதில் அவர் இசையமைத்து தனது தாய்க்கு வாழ்த்து கூறியிருப்பதாக அமைந்துள்ளது. மேலும் அதில் அனைத்து சிங்கள் அன்னைகளுக்கும் சமர்ப்பணம் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். இந்த நெகிழ்ச்சியான வீடியோ குறித்து ரேஷ்மா கூறியிருப்பதாவது.

"அன்பு, பொறுமை, இரக்கம், பாராட்டு, உந்துதல், குழந்தைகளுக்காக நாம் செய்யும் எல்லாவற்றையும் குழந்தைகள் கவனிக்கிறார்கள். 


இப்படி ஒரு மகன் பெற்றதற்கு நான் பாக்கியசாலியாக உணர்கிறேன். நாம் நம் குழந்தைகளிடம் நண்பனாகவும் ஆசிரியராகவும் இருக்க வேண்டும். என்ன ஆனாலும், நான் உன் கூடவே இருப்பேன்" என பதிவிட்டுள்ளார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...