ரொமான்ஸ் பண்ண முடியாது!.. சூர்யாவை டார்ச்சர் செய்த நடிகரின் பேத்தி?

3 years ago 462

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா. கடந்த 2000 ஆண்டு முதல் 2010 வரையிலான ஆண்டு அடுத்தடுத்த வெற்றிகளை கொடுத்து வந்தார் நடிகர் சூர்யா. 

கடைசியாக அஞ்சான் படத்தில் ஆரம்பித்து கடந்த ஆண்டு வரையிலான படங்கள் எதுவும் எடுபடாமல் போனது. ஆனால் ஓடிடி தளத்தில் லாக்டவுன் சமயத்தில் வெளியான சூரரை போற்று படம் சூப்பர் ஹிட் கொடுத்து சாதனை படைத்தது.

நடிகர் சூர்யாவுடன் நடிக்கும் நடிகர் நடிகைகளின் தேர்வை இயக்குநர்கள் பார்த்து பார்த்து தேர்ந்தெடுப்பார்கள். அப்படி தோல்வியை கொடுத்த படமாக இருந்தது, ஸ்ரீ. 

சூர்யா நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஸ்ரீ. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல முன்னாள் நடிகர் தேங்காய் சீனிவாசன் என்பவரின் பேத்தி ஸ்ருதிகா நடித்தார். 

அந்த படத்தில் நடிக்கும் போது அவருக்கு வெறும் 14 வயதுதான். ஸ்ரீ படத்தில் சூர்யாவுடன் வரும் ரொமான்ஸ் காட்சிகளில் ஸ்ருதிகாவுக்கு நடிக்கவே வரவில்லையாம்.

இதனால் சூர்யா என்ன செய்வதென்றே தெரியாமல் செம கடுப்பாகி விட்டாராம். மேலும் அந்த பெண்ணுடன் காதல் காட்சிகளில் நடிப்பது ரொம்ப கஷ்டம் என கையெடுத்து கும்பிட்டு விட்டாராம். இதனை ஸ்ருதிகா ஜாலியாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...