ரோஜா சீரியலில் நடந்த பெரிய மாற்றம் ! ரசிகர்கள் அதிர்ச்சி

3 years ago 542

சன் டிவியில் TRP-யை அள்ளிக்குவித்து வரும் வரும் பிரபல தொடர்களில் ஒன்று ரோஜா.  இந்த தொடரில் முன்னணி வேடங்களில் நடித்து வரும் ப்ரியங்கா மற்றும் சிபு சூரியன் இருவருக்கும் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. 

கொரோனாவுக்கு பிறகு இந்த தொடர் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக சென்று வருகிறது. யாஷிகா ஆனந்த் கொரோனாவுக்கு பிறகு வந்த சில எபிசோடுகளில் சிறப்பு தோற்றத்தில் வந்து சென்றார்.

ரசிகர்களின் ஆதரவோடு 800 எபிசோடுகளை கடந்து அமோக வரவேற்பை பெற்றுள்ளது. பல சுவாரசிய திருப்புமுனைகளுடன் இந்த தொடர் விறுவிறுப்பாக சென்று வருகிறது. கடந்த பல வாரங்களாக TRP-யில் முதல் இடத்தையும் பிடித்து அசத்தி வருகிறது.

இந்த தொடர் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது, தற்போது இந்த தொடர் வரும் திங்கள் முதல் இரவு 9 மணிக்கு மாற்றப்படுவதாகவும்,அந்த நேரத்தில் ஒளிபரப்பாகி வந்த சுந்தரி என்ற புதிய தொடர் 7 மணிக்கு மாற்றப்படுவதாகவும் சன் டிவி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...