சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று, பயங்கர ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் தொடர் ரோஜா.
இத்தொடரில் ஆரம்பத்தில் வில்லியாக, அனு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஷாமிலி சுகுமார். இதில் அவர் பயங்கர வில்லத்தனமான நடிப்பால் அனைவரையும் மிரள வைத்தார்.
அதாவது தான் ஏற்ற நெகடிவ் கதாபாத்திரத்திற்கு ஏற்ப மிகவும் அசத்தலாக தனது நடிப்பை ஷாமிலி வெளிப்படுத்தினார்.
ரோஜா தொடரின் பெரும் வெற்றிக்கு இவரது நடிப்பும் முக்கிய காரணமாக இருந்தது. இந்த நிலையில் கர்ப்பமாக இருந்ததால் அவர் பாதியிலேயே ரோஜா தொடரை விட்டு விலகினார்.
இந்நிலையில் அண்மையில் ஷாமிலிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷாமிலி தனது குழந்தையின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அவர் தற்போது தனது மகளின் க்யூட்டான வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் பாப்பா செம க்யூட், என்னம்மா பாக்குறாங்க.. என கமெண்ட் செய்து வருகின்றனர்.