றெக்க மட்டும் இருந்தா தேவதை தான்: கீர்த்தி பாண்டியனின் வேற லெவல் போட்டோ

3 years ago 589

சமீபத்தில் வெளியான ’அன்பிற்கினியாள்’ என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பெற்றவர் நடிகை கீர்த்தி பாண்டியன்.

பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியன் மகளான கீர்த்தி பாண்டியன் ’அன்பிற்கினியாள்’ படத்தில் தனது தந்தையுடன் நடித்து இருந்தார். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் கீர்த்தி பாண்டியன் அவ்வப்போது பதிவு செய்யும் போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகும்.


தனது சொந்த ஊரான நெல்லையில் சமீபத்தில் விவசாயம் செய்வது போன்ற புகைப்படங்களை கீர்த்தி பாண்டியன் பதிவு செய்ததற்கு பாராட்டுக்கள் குவிந்தது.

இந்த நிலையில் கீர்த்தி பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவல் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். கீர்த்தி பாண்டியனின் இந்த கிளாமர் புகைப்படத்திற்கு கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது. 

’றெக்க மட்டும் இருந்தா நீங்கள் தேவதை தான்’ என்றும், ’நீங்கள் அன்பிற்கினியாள் மட்டுமின்றி கண்ணிற்கும் இனியாள்’ என்றும் ’அழகு என்றால் அது நீங்கள் தான்’ என்றும் பல்வேறு கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...