லிப் லாக் காட்சியில் நடிக்க கஷ்டமா இருக்கு.. நடிகை ஆத்மிகா!

1 year ago 250

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் 2017 -ம் ஆண்டு வெளியான "மீசைய முறுக்கு" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் தான் நடிகை ஆத்மிகா.

இவர் முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களை கவர்ந்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

சமீபத்தில் ஆத்மிகா, உதயநிதி நடிப்பில் வெளிவந்த "கண்ணை நம்பாதே" படத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் தான் கொடுத்தனர்.

இந்நிலையில் ஆத்மிகா பல விஷயங்களை பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், " நான் சில படங்களில் லிப் லாக் காட்சி இருப்பதால் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறேன். 

அந்த மாதிரியான காட்சிகளில் நடிக்க கஷ்டமாக இருக்கும். நான் எப்போதுமே சவாலான கதாபாத்திரத்தில் நடிக்க தான் ஆசைப் படுகிறேன்" என்று ஆத்மிகா கூறியுள்ளார்.  


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...