லிவிங் டுகெதருக்கு ஓகே சொன்ன நடிகை ரைஸா வில்சன்

3 years ago 422

பிரபல ரியாலிட்டி கேம் ஷோவான பிக் பாஸ் தமிழின் முதல் சீசனில் போட்டியாளராகக் கலந்துக் கொண்டவர் மாடல் ரைசா. 

2018-ல் 'பியார் பிரேமா காதல்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு சில படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த அவர், சமூக வலைதளங்களில் பிஸியாக வலம் வருகிறார்.

சமீபத்தில் சமூக வலைதளங்களில் தனது ரசிகர்களுடன் உரையாடிய ரைஸா, லிவிங் டுகெதர் என்ற கருத்தில் தான் உடன்படுவதாக தெரிவித்தார். 

விவ்-இன்னில் விருப்பம் உள்ளதா என்ற ரசிகர்களின் கேள்விக்கு வீடியோவில் பதிலளித்த அவர், "எனக்கு ஓகே. பிரச்னை ஏதும் இல்லை. ஆனால், அதற்கு எனக்கு ஒரு காதலன் வேண்டும்? அது இல்லாமல் நான் என்ன செய்ய முடியும்?” என்று தெரிவித்திருக்கிறார்.

தொழில் முன்னணியில், ரைசாவின் இரண்டு படங்கள் ரிலீஸுக்கு ரெடியாக உள்ளன. லாக்டவுனின் போது ஆக்‌ஷன் த்ரில்லர் படமான, 'தி சேஸ்', விஷ்ணு விஷாலுடன் எஃப்.ஐ.ஆர், ஜி.வி.பிரகாஷுடன் 'காதலிக்க யாருமில்லை' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

சமீபத்தில் பிரபு தேவாவின் அடுத்த படத்திலும் ஒப்பந்தமானார் ரைசா வில்சன். இதில் வரலட்சுமி சரத்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...