சீரியல் நடிகர் ஈஸ்வர் தனது மனைவி ஜெயஸ்ரீ வேறொருவருடன் வாழ்ந்து வருகிறார், அவர் உயிருக்கு ஏதாவது ஆனால் நான் பொறுப்பல்ல என போலீசிடம் புகார் கூறி உள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பு சீரியல் நடிகர் ஈஸ்வர் மற்றும் அவரது மனைவி ஜெயஸ்ரீ ஆகியோர் இடையே நடந்த பிரச்சனை மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது.
கணவர் தன்னை கொடுமை படுத்துவதாக போலீசில் ஜெயஸ்ரீ இரண்டு வருடங்களுக்கு முன்பு புகார் கொடுத்தார். ஈஸ்வர் மகாலட்சுமி என்கிற சீரியல் நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார் என்று ஜெயஸ்ரீ புகார் கூறியது குறிப்பிடத்தக்கது.
அதனால் அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். அதற்குப் பிறகு அவர் ஜாமினில் வெளிவந்தார். அப்போது இருந்து ஈஸ்வர் மற்றும் ஜெயஸ்ரீ இருவரும் தனித்தனியாக பிரிந்து தான் வாழ்ந்து வருகிறார்கள். விவாகரத்து வழக்கும் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்திருக்கும் புகாரில் தனது மனைவி ஜெயஸ்ரீ ஒரு அப்பார்ட்மெண்டில் மருத்துவர் ராகவேஷ் என்பவருடன் ஒன்றாக வாழ்ந்து வருகிறார், அது ராகவேஷின் அப்பாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
ராகவேஷின் அப்பா சண்முகம் பிரபல சினிமா தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.
மகனிடமிருந்து ஜெயஸ்ரீயை பிரிந்து சென்று விடும்படி சண்முகம் ஜெயஸ்யை எச்சரித்தும் அதை ஜெயஸ்ரீ கேட்பதாக இல்லை, அதனால் அவரை கொலை செய்து விடுவேன் என்று அவர்ஈஸ்வரிடம் கூறினாராம்.
அதை தகுந்த ஆதாரத்துடன் போலீசிடம் கூறி இருப்பதாக ஈஸ்வர் தெரிவித்து உள்ளார். அவர்கள் ரிலேஷன்ஷிப் பற்றி சண்முகம் என்னிடம் சென்ற வருடம் அக்டோபரில் பேசினார், தற்போது ஜெயஸ்ரீயை வெட்டிடுவேன், குத்திடுவேன், கார் ஏற்றி கொன்றுவிடுவேன் என சொல்கிறார் என ஈஸ்வர் மீடியா முன்பு பேசும்போது கூறினார்.
அதனால் ஒருவேளை ஜெயஸ்ரீக்கு ஏதாவது நடந்தால் நானும் என்னுடைய அப்பா அம்மா உள்ளிட்டோர் இதற்கு பொறுப்பு அல்ல என தற்போது கூறிக் கொள்வதாக தெரிவித்தார் ஈஸ்வர்.
அதுமட்டுமன்றி ஜெயஸ்ரீ பற்றி மேலும் ஒரு புகாரை ஈஸ்வர் கூறியிருக்கிறார். பல ஆண்களுடன் அவர் பணம் பறிக்கும் நோக்கிலேயே பழகி வருகிறார் எனவும், தற்போது நடந்து வரும் விவாகரத்து வழக்கு விசாரணைக்காக ஜெயஸ்ரீ ஆஜராகாமல் தவிர்த்து வருகிறார் எனவும் குற்றம்சாட்டி இருக்கிறார்.