வடிவேலுவோடு சேர்ந்து நடித்த காமெடி நடிகையா இது? எப்படி இருக்காங்க பாருங்க...

2 years ago 651

வைகைப்புயல் வடிவேலுவோடு ஒரு காட்சியில் நடித்தால் கூட பெரிய அளவில் ஹிட் ஆகிவிடுவது வழக்கம். அந்தவகையில் வடிவேலுவோடு சேர்ந்து நடித்தவர் தான் ஹேமாலதா. கண்டமனூர் ஜமீன் கண்டம் பண்ணிட்டாரு... எனத் தொடங்கும் காமெடியில் தோட்டக்காரன் பார்த்துட்டான்.  வேலைக்காரன் பார்த்துட்டான் என வசனங்கள் நீளும். 

இந்தக் காமெடி பட்டி, தொட்டியெங்கும் ஹிட் அடித்தது. அஜித் நடித்த வில்லன் உள்பட சில படங்களில் ஹேமா லதா சின்ன ரோலில் நடித்து இருக்கிறார். ஆனாலும் வடிவேலுவோடு நடித்த படமே அவருக்கு பெரிய ஹிட்டைக் கொடுத்தது.

அதன் பின்பு ஹேமாலதாவுக்கு பெரிய பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்பு ஹேமாலதாவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே ஹேமாலதாவா இது? ஆள் அடையாளமே தெரியாமல் மாறிவிட்டாரே என கமெண்ட் செய்துவருகின்றனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...