வனிதா, பவர் ஸ்டார் ரொமான்ஸ்… நக்கலடித்த லட்சுமி ராமகிருஷ்ணன்!

3 years ago 419

வனிதா மற்றும் பவர் ஸ்டாரின் ரொமான்ஸ் புகைப்படத்தை பார்த்து லட்சுமி ராமகிருஷ்ணன் நக்கலடித்துள்ளார்.

இதை பார்த்த லட்சுமி ராமகிருஷ்ணனின் ஆதரவாளர்கள், வனிதா போட்டோவுக்கு ஏன் கருத்து சொல்லாறீங்க என்று கேட்டுக்கொண்டனர். இதையடுத்து, லட்சுமி ராமகிருஷ்ணன் அந்த கமெண்டை நீக்கிவிட்டார்.

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் வனிதா விஜயகுமார். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

திடீரென பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டு ரசிகர்களுக்கு பெரும் ஷாக் கொடுத்தார். எவ்வளவு பரபரப்பாக அவசரமாக திருமணம் நடைபெற்றதோ அதே வேகத்தில் அவரிடமிருந்த பிரிந்தார் வனிதா விஜயகுமார்.

பல திரைப்படங்களில் கமிட்டாக பிஸியாக நடித்து வருகிறார். திடீரென பவர் ஸ்டாருடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இணையத்தை தெறிக்கவிட்டார். 4வதாக ஒருவரை திருமணம் செய்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறி இருந்த நிலையில் இந்த புகைப்படம் தீயாக பரவியது.


வனிதா , பவர் ஸ்டாருடன் பிக்கப் என்ற படத்தில் நடிக்கிறார் அந்த படத்திற்கான புகைப்படம் என்பது தெரியவந்தது. இதையடுத்து பவர் ஸ்டாருடன் மார்டன் உடையில் கன்னத்தோடு கன்னம் வைத்து ரொமான்ஸ் செய்யும் புகைப்படம் இணையத்தில் வெளியாகின.

இந்த புகைப்படத்தை ரசிகர் ஒருவர், வனிதா விஜயகுமார் மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு டேக் செய்திருந்தார். இதனைப் பார்க்கும்போது மிகவும் காமெடியா இருக்கு நல்ல சிரிச்சேன் என்று பதிவிட்டு, எனக்கு டேக் செய்யாதீர்கள் என ராமகிருஷ்ணன் நக்கலாக கேட்டுள்ளார். 

இதை பார்த்த லட்சுமி ராமகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் எதுக்கு வனிதா போட்டோவுக்கு கருத்து சொல்லீங்க அவங்க தரக்குறைவாக பேசுவாங்க என்று கூறியதை அடுத்து. அந்த கருத்தை சிறிது நேரத்தில் நீக்கிவிட்டார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...