வயிறு குலுங்க சிரிக்க வைத்த சுந்தரா டிராவல்ஸ்… இரண்டாம் பாகம்

3 years ago 294

முரளி மற்றும் வடிவேலுவின் நடிப்பில் வெளியாகி மக்களின் மனம் கவர்ந்த சுந்தரா டிராவல்ஸ் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.

வடிவேலு கதாபாத்திரத்தில் யோகி பாபும், முரளி கதாபாத்திரத்தில் கருணாகரன் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2002ம் ஆண்டு முரளி மற்றும் வடிவேலுவின் நடிப்பில் வெளியான திரைப்படம் சுந்தரா டிராவல்ஸ். இப்படத்தின் வினுசக்கரவர்த்தி, ராதா ஆகியோர் முக்கியமான நடித்திருப்பார்கள். 

இப்படம் ஆரம்பம் முதல் இறுதி வரை முழுக்க நகைச்சுவை நிறைந்து இருக்கும். இப்படம் வடிவேலுவுக்கும் முரளிக்கும் ஒரு திருப்புமுனை ஏற்படுத்திய திரைப்படமாக அமைந்தது.

இந்த திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு காமெடி காட்சியும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும். அதிலும் குறிப்பாக மாப்பிளைய கல்யாணத்துக்கு ரெடி பண்ணும் காட்சி அல்டிமேட், சிரிச்சி சிரிச்சி வாயிரே வலிக்கும். 

எப்போ இந்த காட்சியை பார்த்தாலும் சிரிப்பை அடக்கவே முடியாது. இப்படம் கிட்டத்தட்ட பல நாட்கள் திரையில் ஓடி பெரும் வசூலை வாரிக்குவித்தது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வடிவேலு கதாபாத்திரத்தில் யோகி பாபும், முரளி கதாபாத்திரத்தில் கருணாகரன் நடிக்க இருப்பதாகவும் பேச்சுக்கள் அடிப்பட்டு வருகின்றன. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...