தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது.
எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக படக்குழு எந்தவித அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஐதராபாத்தில் அஜித்தை கண்ட ரசிகர்கள் சிலர் வலிமை அப்டேட் எப்போது வரும் என்று கேட்டுள்ளனர். அதற்கு அஜித் மிக விரைவில் என பதிலளித்துள்ளார். இதனால் ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
வலிமை படத்தின் அப்டேட் குறித்து அஜித்தே வாய்திறந்து பேசியது ரசிகர்களை மிகுந்த உற்சாகப் படுத்தி உள்ளது.