வலிமை பட ஹீரோயினிடம் அப்டேட் கேட்ட தமிழ் நடிகர்

3 years ago 214

அஜித்-எச்.வினோத் கூட்டணியில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். 

போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். இவர் தமிழில் ஏற்கனவே ரஜினி உடன் ‘காலா’ படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை ஹூமா குரேஷியிடம் பிரபல நடிகர் சித்தார்த், சமூக வலைதளம் வாயிலாக வலிமை அப்டேட் கேட்டுள்ளார். 

நடிகர் சித்தார்த் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை செய்தார். இந்த பதிவுக்கு ‘வலிமை’ பட நாயகி ஹூமா குரேஷி ஒரு கமெண்ட்டை பதிவு செய்த நிலையில், சித்தார்த் அவரிடம் ‘மேடம் வலிமை அப்டேட்’ என்று கேட்டுள்ளார். சித்தார்த்தின் இந்த கமெண்டுக்கு லைக் குவிந்து வருகிறது.



 


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...