வலிமையில் அஜித் பயன்படுத்திய பைக் பெயர் என்ன தெரியுமா? வில்லனுக்கும் ஒரு செம பைக்!

3 years ago 331

தல அஜித் நடிப்பில் இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வெளியாக உள்ள திரைப்படம் வலிமை. சமீபத்தில் போனிகபூர் மனம் இரங்கி வந்து வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவற்றை வெளியிட்டார். 

தல அஜித் ரசிகர்களை மட்டுமே அந்த போஸ்டர்கள் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. அதற்கு காரணம் மாஸ் காட்ட வேண்டும் என்பதற்காக வீடியோ கேம் போன்ற போஸ்டரை ரெடி செய்து அப்செட் செய்தனர்.

இருந்தாலும் தல ரசிகர்கள் இந்த போஸ்டரை கொண்டாடத் தவறவில்லை. தற்போது யூடியூபில் 10 மில்லியன் பார்வையாளர்களையும் ஒரு மில்லியன் லைக்குகளையும் கடந்துள்ளது இந்த மோஷன் போஸ்டர்.

 மேலும் வலிமை படம் முழுக்க முழுக்க பைக் சம்பந்தப்பட்ட படம் தான் என்பதை வெளிவந்த போஸ்டரே உணர்த்துகிறது. இது குறித்து விசாரிக்கையில் தல அஜித் எந்த பைக்கை உபயோகப் படுத்தினார் என்பது குறித்தும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இத்தாலியைச் சேர்ந்த நிறுவனம் தயாரித்த எம்வி அகஸ்டா ப்ரூட்டலே 800cc(mv agusta brutale 800) வகையை பயன்படுத்தி உள்ளாராம். இந்த பைக் தல அஜித்துக்கு மிகவும் பிடித்த பைக் எனவும் கூறுகின்றனர். இந்த பைக்கின் இந்திய மதிப்பு 18 லட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 அதேபோல் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வலிமை படத்தில் நடித்துள்ளார். அவருக்கும் சுசுகி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட சுசுகி பி கிங்(suzuki b king) என்ற பைக்கை பயன்படுத்தியுள்ளனர். இந்த பைக்கின் விலை இந்திய மதிப்பில் 11 லட்சம் என்கின்றனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...