விக்னேஷ் சிவனுக்கு புது பட்டம் கொடுத்த நயன்தாரா

3 years ago 355

தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தற்போது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் காமெடி ரொமான்ஸ் படமாக தயாராகி வருகிறது. 

இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் சமந்தா நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் முதல் பாடல், கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தையொட்டி வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இரண்டாவது பாடல் குறித்த முக்கிய அப்டேட்டை நயன்தாரா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளான வரும் செப்டம்பர் 18-ம் தேதி ‘டூ.. டூ.. டூ’ என்ற இரண்டாவது பாடல் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

 மேலும் அவர் அந்த டுவிட்டில் விக்னேஷ் சிவனை ‘அன்பான டைரக்டர்’ என குறிப்பிட்டுள்ளார். இது நயன்தாரா கொடுத்த புதுபட்டம் என கூறப்படுகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...