விஜயின் பீஸ்ட் ஹாலிவுட் படத்தின் காப்பியா...?

3 years ago 268

பீஸ்டை இயக்கிவரும் நெல்சனின் முதல் படம் கோலமாவு கோகிலா அண்டர்புரொடக்ஷனில் இருக்கும் போதே, அப்படம் ஹாலிவுட்டில் வெளியான வீ ஆர் தி மில்லர்ஸ் படத்தின் தழுவல் என கூறப்பட்டது. 

வீ ஆர் தி மில்லர்ஸில் சின்ன அளவில் போதைப் பொருள் விற்கும் டேவிட் கிளார்க் தனது பாஸுக்கு பணம் தர வேண்டியிருக்கும். பணத்துக்கு ஈடாக எல்லை தாண்டி போதைப்பொருளை கடத்திவர வேண்டும் என அவனது பாஸ் கட்டளையிடுவார்.

தனி நபராக கடத்தி வந்தால் மாட்டிக் கொள்வோம், அதுவே ஒரு குடும்பம் என்றால் சோதனை இருக்காது என நினைப்பவன் கிளப்பில் ஸ்ட்ரிப்பராக இருக்கும் பெண், ஒரு டீன்ஏஜ் பையன், பக்கத்து வீட்டு தற்குறி நபர் என சிலரை சேர்த்து, போலியாக ஒரு குடும்பத்தை செட் செய்து போதைப் பொருளை கடத்துவான்.

இதில் ஸ்ட்ரிப்பராக வரும் ஜெனிஃபர் அனிஸ்டன்தான் கதையை நகர்த்திச் செல்வார்.  கோலமாவு கோகிலாவின், ஒரு குடும்பம் போதைப் பொருளை கடத்துகிறது என்ற ஒருவரி வீ ஆர் தி மில்லர்ஸ் படத்திலிருந்து எடுத்தது. அதனை தமிழுக்கு ஏற்ப பட்டி டிங்கரிங் பார்த்து நெல்சன் கோலமாவு கோகிலா ஆக்கிவிட்டார் என்ற குற்றச்சாட்டு இப்போதும் உண்டு.

படத்தில் வரும் யோகி பாபு, நயன்தாராவின் தங்கையை காதலிக்கும் இளைஞன் என எல்லோரது சாயலையும் வீ ஆர் தி மில்லர்ஸ் படத்தில் வரும் கதாபாத்திரங்களில் பார்க்கலாம். 


குடோனில் வைத்து நயன்தாராவையும், அவள் தங்கையையும் பாலியல் பலாத்காரம் செய்வதாக யோகி பாபுவும் மற்றவர்களும் தவறாக நினைக்கும் காமெடிக் காட்சி இதில் வேறொரு வடிவத்தில் வரும்.

நிற்க. நிகழ்காலத்துக்கு வருவோம். பீஸ்டில் நடித்த துணை நடிகர் ஒருவர், யோகி பாபு நடிச்ச கூர்க்கா மாதிரியே பீஸ்ட் இருக்கு என்று பொதுவில் புலம்பிய ஒரு வார்த்தை தற்போது சர்ச்சையாகியுள்ளது.

கூர்க்கா படமே மால் காப் என்ற படத்தின் இன்ஸ்பிரேஷனில் எடுத்தது. பீஸ்டிலும் ஷாப்பிங் மால் செட்டில்தான் முக்கியமான காட்சிகளை எடுத்தனர். இதனை வைத்து பீஸ்ட் காப்பி என சொல்ல முடியுமா என்கிறார்கள். உண்மைதான். ஆனால், நெல்சனின் முதல்பட விவகாரம் வேறு மாதிரி சொல்கிறதே என திருப்பிக் கேட்கிறார்கள். 

மால் காப் ஒரு சிறிய ரசிகர்வட்டத்தை திருப்பிச் செய்யும் படம். நிச்சயம் அது பீஸ்டாக இருக்க வாய்ப்பில்லை. படம் வந்தால் உண்மை தெரிந்துவிடப் போகிறது.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...