விஜய் கூட ஆடும் போது 2 மாசம் கர்ப்பம்... அஜித் கிட்ட திட்டு வாங்கினேன்.. மனந்திறந்த மாளவிகா

3 years ago 646

இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியான 'உன்னைத் தேடி' என்ற படம் மூலம் அறிமுகமானவர் மாளவிகா.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என தென்னிந்திய மொழிகளில் 90 களின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். 

திருமணத்திற்கு பின் ஒரு சில படங்களில் நடனம் மட்டுமே ஆடிய இவர், கடைசியாக விஜயுடன் குருவி படத்தில் 'டண்டானா டர்னா' என்கிற பாடலுக்கு, டான்ஸ் ஆடினார்.

இந்த டான்ஸ் ஆடும்போது, மளவிகாவிற்கு திருமணம் ஆகிவிட்ட போதிலும்... விஜய் கோலிவுட் திரையுலகின் டாப் நடிகர் என்பதால், அவருடன் டான்ஸ் ஆடும் வாய்ப்பை மிஸ் பண்ண கூடாது என்பதற்காக 2 மாதம் கர்ப்பமாக இருக்கும் போது கூட ஒப்புக்கொண்டாராம்.


இவர் கர்ப்பமாக இருப்பதை அறிந்து நடன இயக்குனரும், எளிமையான ஸ்டெப்ஸ் மட்டுமே கொடுத்தது, தனக்கு மிகுந்த வருத்தம் என்று தன்னுடைய மலரும் நினைவுகளை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதே போல் மாளவிகா நடித்த முதல் திரைப்படம் 'உன்னைத்தேடி' அந்த திரைப்படத்தில் அஜீத்தான் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தில் சரியாக டான்ஸ் ஆட வில்லை என்பதால் அஜித்திடம் திட்டு வாக்கியத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மேலும் தனது வாழ்நாளில் மிகப்பெரிய பாக்கியம் என்றால் அது ’சந்திரமுகி’ திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்தது என்றும், அவர் ஒரு மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அவர் மிக எளிமையாக இருந்தார் என கூறியுள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...