விஜய் சேதுபதி படத்தில் பாடும் STR...எந்த படத்தில் தெரியுமா..?

3 years ago 275

இயக்குநர் வெங்கட கிருஷ்ணா ரோகந்த் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் திரைப்படம் யாதும் ஊரே யாவரும் கேளிர் . 

இயக்குநர் மோகன் ராஜா இந்த படத்தில் பிரதான கேரக்டரில் நடித்துள்ளார். விஜய்சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். 

காமெடி நடிகர் விவேக்கும் இந்த படத்தில் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழில் ஏற்கனவே வெளியான க/பெ. ரணசிங்கம் படத்தைப் போலவே இந்த படத்தின் கதையும் வித்தியாசமாக இருக்கும் என கூறப்படுகிறது. 

இந்த நிலையில் தற்போது இந்த படத்திலிருந்து ஒரு அப்டேட் கிடைத்துள்ளது. இந்த படத்தில் நடிகர் சிம்பு ஒரு பாடல் ஒன்றை பாடியுள்ளாராம்.

அந்த பாடல் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...