கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு விஜய்யில் நிறைய ஷோக்கள் ஒளிபரப்பாகின. அதில் ஒன்று தான் காமெடி ராஜா கலக்கல் ராணி.
சீரியல் பிரபலங்கள் மற்றும் சில நிகழ்ச்சியில் பங்குபெற்று பிரபலமான சிலரும் இந்நிகழ்ச்சியில் ஜோடி போட்டு கலக்கி வந்தார்கள். நன்றாக ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த இந்நிகழ்ச்சி முடிவுக்கு வந்துவிட்டதாம்.
அண்மையில் காமெடி ராஜா கலக்கல் ராணி பைனல் நிகழ்ச்சி படமாக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படங்கள் சில வெளியாக ரசிகர்கள் அதற்குள் நிகழ்ச்சி முடிகிறதா என தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.