விஜய்… நீங்கள் மனிதரே அல்ல, கடவுள் ... கங்கனா சொல்கிறார்

3 years ago 332

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. 

ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற ஏப்ரல் 23-ந் தேதி ரிலீசாக உள்ளது. தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், நடிகை கங்கனா ரணாவத், இயக்குனர் ஏ.எல்.விஜய்யுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் “அன்புள்ள விஜய் சார், ‘தலைவி’ படத்தின் டப்பிங் முதல் பாதி முடிந்தது. இன்னும் இரண்டாம் பாதி மட்டுமே மீதமுள்ளது. நமது இந்தப் பயணம் முடிவுக்கு வர இருக்கிறது. 

ஒரு நடிகையாக நான் நன்றாக நடிக்கும்போது உங்கள் கண்கள் பிரகாசமாகும். பல ஏற்ற, இறக்கங்கள் இருந்தாலும், நான் உங்களிடம் ஒரு துளி கோபத்தையோ, அச்சத்தையோ, விரக்தியையோ பார்த்ததே இல்லை.

உங்களை பல வருடங்களாக அறிந்தவர்களிடம் உங்களைப் பற்றி பேசினேன். உங்களைப் பற்றி பேசும்போது, அவர்கள் கண்களும் பிரகாசமடைகின்றன. 

விஜய், நீங்கள் மனிதரே அல்ல, கடவுள். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். நான் உங்களை மிஸ் பண்றேன்”. இவ்வாறு கங்கனா குறிப்பிட்டுள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...