விஜய் படங்களிலேயே இதுதான் அதிக பட்ஜெட் படமா?

3 years ago 636

தளபதி விஜய் தற்போது ’பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாக உள்ள ’தளபதி 66’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் இந்த படம் தான் விஜய் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் என்ற பெருமையைப் பெறும் என்ற தகவல் தமிழ் தெலுங்கு திரையுலகினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே இந்த படத்தில் விஜய்க்கு 100 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்ததாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் வேறு சில தமிழ் தெலுங்கு பிரபலங்களும் நடிக்க உள்ளனர்.

அவர்களது சம்பளம் மற்றும் கோடிக் கணக்கில் செலவு செய்து செய்யப்படும் செட் ஆகியவற்றை சேர்த்தால் தளபதி விஜய் நடித்த படங்களிலேயே இந்த படம்தான் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் என்று என்ற பெருமையைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் விஜய் நடிக்கும் நேரடி தெலுங்கு படம் என்பதாலும் உலகம் முழுவதும் விஜய் படத்திற்கு மிகப் பெரிய மார்க்கெட் இருக்கிறது என்பதாலும் இந்த படத்தை மிகப் பெரிய பட்ஜெட் தயாரிக்க படக்குழுவினர் முன் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...