தளபதி விஜய்யின் 47-வது பிறந்த நாள் நேற்று உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சமூக வலைதளங்கள் மூலம் விஜய்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது.
அவர் நடித்து வரும் 65வது திரைப்படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
இந்த நிலையில் தளபதி விஜய் 47வது பிறந்த நாளை அடுத்து கடலூர் மேற்கு மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விருத்தாச்சலம் பொதுச் செயலாளர் கரங்களால் கொரோனாவால் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் 200 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.
இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதேபோன்று பல பகுதிகளில் விஜய்யின் பிறந்தநாளை அடுத்து அன்னதான நிகழ்வு நடைபெற்றது என்பதும் முதியோர்கள் இல்லம் மற்றும் குழந்தைகள் இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது.