விஜய் ரசிகர்களுக்கு மறுபடியும் ஓர் கொண்டாட்டம்!

3 years ago 280

மாஸ்டர் படம் வெளியாகி ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது. படத்தின் வசூல் வெற்றியையும், பாடல்கள் டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து செய்து வரும் சாதனைகளையும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

விஜய்யின் அடுத்த படம் இயக்குனர் நெல்சன் உடன் தான் என உறுதியாகிவிட்டது. சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிப்பதும் அறிவிப்பாக வெளியிடப்பட்டது.

சன் தொலைக்காட்சியில் விஜய்யின் படங்கள் அடிக்கடி திரையிடப்பட்டு வருகிறது. அதிலும் வார இறுதி என்றால் விஜய் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்.

இவ்வார இறுதியில் விஜய் திரிஷா நடித்த திருப்பாச்சி படத்தை திரையிடுகிறார்களாம்.

கடந்த 2005 ல் பொங்கல் பண்டிகையை ஒட்டி இப்படம் வெளியானது. அதே வேளையில் சரத்குமார் நயன் தாரா நடித்த ஐயா, தனுஷ் ஸ்ரீ தேவி நடித்த தேவதையை கண்டேன் படங்களும் வெளியானது.

பேரரசு இயக்கிய இப்பட்ம விஜய்கு 40 வது படம் என்பதும் படம் 100 நாட்களுக்கு மேல் ஓடியதும் குறிப்பிடத்தக்கது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...