விஜய்க்கு ஜோடியாக நடித்த ரிச்சா பல்லோட்டா இது? 40 வயசுன்னு நம்பமாட்டீங்க..

3 years ago 500

தமிழ்த்திரையுலகில் நடிகர்களைப் பொறுத்தவரை நீண்ட காலத்துக்கு பீல்டில் இருக்கிறார்கள். ரஜினி, கமல், சரத்குமார் என அந்தவகையில் பெரிய பட்டியலே போடலாம். 

அதேநேரம் ஹீரோயின்களைப் பொறுத்தவரை அவ்வளவு காலம் தாக்குப்பிடிப்பதில்லை. அத்திபூத்தார்போல் நயன், த்ரிஷா என வெகுசிலரே பத்து, பதினைந்து ஆண்டுகளைக் கடந்தும் திரையுலகில் நிற்கின்றனர்.


அந்தவகையில் படத்துக்கு, படம் நாயகிகளின் அறிமுகத்துக்கும் பஞ்சம் இல்லை. அந்தவரிசையில் மிகக்குறுகிய காலத்தில் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நடிகை தான் ரிச்சா பல்லோட். 

மாடலிங்துறையில் இருந்து நடிக்க வந்த இவர் இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழி படங்களிலும் நடித்துள்ளார். நுவே காவலி என்ற தெலுங்குப்படம் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகம் ஆனார்.


இந்தியிலும் ஒரு கலக்கு கலக்கினார். விஜய் நடித்த ஷாஜகான் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.

தொடர்ந்து அல்லி அர்ஜூனா, ஜெயம் ரவியின் உனக்கும் எனக்கு சம்திங் சம்திங் உள்பட சில தமிழ்ப்படங்களில் நடித்தவர், இப்போது திருமணம் முடிந்து ஒரு குழந்தைக்கும் தாயாக பெங்களூரில் வசிக்கிறார். 


இப்போது 40 வயதைத் தாண்டியிருக்கும் நடிகை ரிச்சா ஆள் அடையாளமே தெரியாமல் மாறிவிட்டார். இந்தப் புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரல் ஆகிவருகின்றன.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...