விஜய்க்குக் கொடுக்கப்படும் சம்பளம்... மனந்திறந்தார் 'மாஸ்டர்' தயாரிப்பாளர்

3 years ago 452

 'மாஸ்டர்' தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோ, விஜய்க்குக் கொடுக்கப்படும் சம்பளம் நியாயமானதுதான் என்று தெரிவித்துள்ளார். 'மாஸ்டர்' வசூல் நிலவரம் குறித்து அளித்துள்ள பேட்டியில், அவர் கூறியிருப்பதாவது:

சந்தைச் சூழலால் மீண்டும் முதலில் போட்ட ஒப்பந்தத்தை எடுத்து வைத்து அதை மாற்ற வேண்டும் என்று சொல்வது சரியாக இருக்காது.  விஜய் ஒரு சம்பளத்தை ஏற்றுக்கொண்டார். அது அவருக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது. அவ்வளவே. 

மீண்டும் அவரிடம் சென்று எதுவும் பேரம் பேசவில்லை. முதலிலிருந்தே அவருடனான என் உறவு தொழில் முறையாக ஒழுங்காக உள்ளது. நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம்.

விஜய்க்குக் கொடுக்கப்படும் சம்பளம் நியாயமானதே. இன்று நல்ல வியாபாரம் இருக்கும் நாயகர்களில் ஒருவர் அவர். வெள்ளி, தங்கம், வைரம் என ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை தருகிறோம். 

அதன் மதிப்பு மாறுகிறது இல்லையா? அதேபோல வைரத்துக்கு அதிக விலைதான் தர வேண்டும். அதை நாம் எவ்வளவு வைத்திருக்கிறோமோ அதன் மதிப்பு அவ்வளவு கூடும்.

எனவே, விஜய் கேட்கும் சம்பளம் நியாயமானதே. ஏனென்றால் அவர் இந்தத் துறையில் நீண்ட காலமாக இருக்கிறார், பல வெற்றிப் படங்களைத் தந்திருக்கிறார், பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கியிருக்கிறார். அது எல்லாம் முக்கியம். 

இவை வெறும் ஒன்றிரண்டு வருடங்களில் வராது. பல வருடங்கள், 1992-ல் ஆரம்பித்து இன்றுவரை அதற்காகக் கடினமாக உழைத்து வருகிறார். எனவே அவர் அந்த சம்பளத்துக்குத் தகுதியானவர்”. இவ்வாறு சேவியர் பிரிட்டோ தெரிவித்துள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...