விஜய்யின் லியோ படத்தில் இருந்து விலகுகிறாரா திரிஷா?

1 year ago 236

தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்று லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடித்து வருகிறார். 

தற்போது காஷ்மீரில் அப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. லியோ படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க திரிஷா கமிட் ஆகி உள்ளார். 

ஏற்கனவே விஜய் உடன் குருவி, கில்லி, ஆதி, திருப்பாச்சி போன்ற படங்களில் நடித்துள்ள திரிஷா தற்போது 5-வது முறையாக அவருடன் இணைந்துள்ளார். 


இருவரும் 14 ஆண்டுகளுக்கு பின் சேர்ந்து நடிக்கின்றனர். மற்றொரு ஸ்பெஷல் என்னவென்றால் விஜய்க்கும் திரிஷாவுக்கும் இது 67-வது படமாகும். இப்படத்தில் நடிகர் விஜய்யின் மனைவியாக திரிஷா நடிப்பதாக கூறப்பட்டது.

இதனிடையே, நடிகை திரிஷா, லியோ படத்தில் இருந்து விலகிவிட்டதாக ஒரு தகவல் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இந்த குழப்பத்திற்கு காரணம் திரிஷா தான். 

ஏனெனில், அவர் லியோ படத்தில் நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர், அவரைப்பற்றி நெட்டிசன்கள் போட்ட டுவிட் பலவற்றை தனது டுவிட்டர் பக்கத்தில் ரீ-டுவிட் செய்திருந்தார். 

ஆனால் தற்போது அதில் பெரும்பாலான டுவிட்களை அவர் நீக்கி உள்ளார். இதைவைத்து தான் அவர் லியோ படத்தில் இருந்து விலகிவிட்டதாக தகவல் பரவி வருகிறது.


இருப்பினும் லியோ பட பூஜையில், விஜய்யுடன் ஜோடியாக எடுத்த புகைப்படம் மற்றும் லியோ படக்குழு தான் அப்படத்தில் இணைந்ததை அதிகாரப்பூர்வமாக அறிவித்து வெளியிட்ட போஸ்டர் ஆகியவற்றை திரிஷா நீக்கவில்லை. 

இதனால் அவர் லியோ படத்தில் இருந்து விலகியதாக பரவும் தகவல் வெறும் வதந்தி என்று கூறப்படுகிறது. 


அதுமட்டுமின்றி திரிஷா தான் ரீ-டுவீட் செய்யும் பதிவுகளை ஒருசில நாட்களில் டெலிட் செய்வது வழக்கம் தான் எனவும் அப்படித்தான் லியோ படம் குறித்த பதிவுகளை அவர் நீக்கியதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...