விஜய்யை தொடர்ந்து அஜித் பட இயக்குனருடன் இணைந்த மாஸ்டர் தயாரிப்பாளர்

3 years ago 180

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் ’மாஸ்டர்’.  இப்படத்தை சேவியர் பிரிட்டோ தனது எஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து இருந்தார். இவர் அடுத்ததாக புதிய படத்தை தயாரிக்க இருக்கிறார்.

இந்த படத்தை அஜித்தை வைத்து ‘பில்லா’, ‘ஆரம்பம்’ படங்களை இயக்கிய விஷ்ணு வரதன் இயக்க இருக்கிறார். 

மேலும் இப்படத்தில் நடிகர் முரளியின் மகனும், அதர்வா முரளியின் இளைய சகோதரரான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகிறார். இதற்கான அறிவிப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

மேலும் இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் பட்டியலை விரைவில் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறார்கள்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...