விஜய்யை பார்த்து 'அந்த 3' வார்த்தை சொன்ன சாய் பல்லவி

2 years ago 665

தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருபவர் சாய் பல்லவி. தெலுங்கு திரையுலகில் தான் தற்போது அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அதனாலேயே அவருக்கு சில பிரச்சனைகளும் ஏற்படுகிறது.

இந்நிலையில் 2017ம் ஆண்டு நடந்த விருது விழாவில் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

விருது விழாவில் விஜய் நடந்து வருகிறார். அப்பொழுது விஜய் சாய் பல்லவி அருகில் வந்ததும் அவரோ, பிக் ஃபேன் சார் என்கிறார்.

அந்த வீடியோ தான் தற்போது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. விஜய்க்கு திரையுலகிலும் ஏகப்பட்ட ரசிகர்கள், ரசிகைகள் இருக்கிறார்கள். அதில் சாய் பல்லவியும் ஒருவர்.

இனி வரும் காலத்தில் விஜய் படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடிப்பாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். விஜய்க்கு வயது மட்டும் தான் ஏறிக் கொண்டே போகிறதே தவிர, ஆள் அப்படியேத் தான் இளமையாக இருக்கிறார்.

மேலும் சின்ன பையன்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் டான்ஸ் ஆடுகிறார். சாய் பல்லவி எப்படி டான்ஸ் ஆடுவார் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் ரவுடி பேபியுடன் சேர்ந்து தளபதி டான்ஸ் ஆடுவதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...