விஜய்யைத் தொடர்ந்து சூர்யா படத்தில் பூஜா ஹெக்டே... என்ன படம் தெரியுமா?

3 years ago 280

அடுத்தபடியாக சூர்யா நடிக்கும் புதிய படத்திலும் நடிக்கயிருப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.  தற்போது பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்தபடியாக வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்கிறார். 

அந்த படத்தை முடித்ததும் சிவா இயக்கும் படத்தில் நடிக்கப்போகிறார் சூர்யா. இந்த படத்தில்தான் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறாராம். 

ஏற்கனவே சிறுத்தை சிவா இயக்கத்தில சூர்யா நடிக்க தயாரானார். ஆனால் அந்த நேரம் பார்த்து ரஜினி படவாய்ப்பு சிறுத்தை சிவாவுக்கு கிடைத்ததால் சூர்யா படத்தை தள்ளி வைத்து விட்டு ரஜினி படத்தை இயக்க சென்று விட்டார்.

அதோடு சூர்யாவும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அவரை ரஜினி படத்தை இயக்க அனுப்பி வைத்தார். இந்நிலையில் தற்போது அண்ணாத்த படத்தை முடித்ததும் சூர்யா நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் சிவா.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...