விரைவில் திரையுலகில் அறிமுகமாகும் ராஜ்கிரண் மகன்...!

3 years ago 355

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ராஜ்கிரண். பட விநியோகஸ்தராக வாழ்க்கையை ஆரம்பித்த ராஜ்கிரண், தயாரிப்பாளரில் இருந்து நடிகராக புரோமோஷனான திரைப்படம் ‘என் ராசாவின் மனசிலே’ 

மீனா, ஸ்ரீவித்யா, வடிவேலு உள்ளிட்டோர் நடித்த அந்த படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி நல்ல வரவேற்பை பெற்றது. 

விநியோகஸ்தர் ஏசியன் காதராக புகழ்பெற்ற ராஜ்கிரண் ஒரே படத்தில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக மாறினார்.

தற்போதும் கூட தனக்கு பொருத்தமான கதாபாத்திரமும், நல்ல கதையும் கிடைத்தால் புகுந்து விளையாடுகிறார். அப்படி ராஜ்கிரண் ஹீரோவாக நடித்த ‘ப.பாண்டி’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. 


இப்படிப்பட்ட நடிகரின் வாரிசு திரையுலகில் கால் பதிக்காமல் இருந்தால் எப்படி என ரசிகர்கள் காத்திருந்த சமயத்தில், முகநூல் பக்கம் மூலமாக  தன்னுடைய மகன் சினிமாவில் அறிமுகமாக உள்ள அசத்தலான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ராஜ்கிரண்.

“இறை அருளால், இன்று என் மகனார் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது அவர்களின் இருபதாவது பிறந்த நாள். ‘என் ராசாவின் மனசிலே’ இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி முடித்துவிட்டு, திரைக்கதையை எழுதிக் கொண்டிருக்கிறார். 

அவரே படத்தை இயக்கவும் உள்ளார். அவர் மிகப்பெரும் வெற்றிப்பட இயக்குனராக, உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளையும், வாழ்த்துகளையும் வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...