விலையுயர்ந்த காரை பயன்படுத்திய மறைந்த நடிகை சித்ரா- வைரலாகும் புகைப்படம்

3 years ago 412

கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம், சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணச் செய்தி, சின்னத்திரை உலகையே ஸ்தம்பிக்கச் செய்தது. அவர் தற்கொலை செய்து இறந்து போனார் என்பது பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியது. 

இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு கூட, ஒரு ரியாலிட்டி ஷோ படபிடிப்பில் இருந்தார். தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்தார். அடுத்த நாள் விடியும் முன்பே, அவர் தற்கொலை செய்து இறந்து போனார் என்ற செய்தி இணையத்தில் வைரலாகி, ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சின்னத்திரையில் தொகுப்பாளாராக அறிமுகமாகி, பல்வேறு கஷ்டங்களை, சவால்களை எதிர்கொண்டு, அனைத்தையும் ஜெயித்து, பிரபலமான நிலையில், சட்டென்று இப்படியொரு முடிவு எடுத்தது ஏன் என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. அதுவும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக அனைவர் மனதிலும் இடம் பெற்றிருந்த நேரத்தில் இந்த துயரமான சம்பவம் நிகழ்ந்தது.

பெரிய அளவில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உருவாகியது. அதற்கு முன்பும், கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான வேலு நாச்சி சீரியலில் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்து, மனதைக் கவர்ந்தவர் சித்ரா. இவரின் தமிழுக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. சித்ராவின் பிரத்யேக ரசிகர் கூட்டத்திற்கு, இன்று வரையிலும் இவரின் இறப்பை தங்கிக் கொள்ள முடியவில்லை

அதனால், அவரைப் பற்றிய பல புகைப்படங்களையும், வீடியோக்களையும் இன்று வரை பகிர்ந்து வருகின்றனர். சமீபத்தில், சித்ராவின் தீவிரமா ரசிகர் ஒருவர், அவர் பயன்படுத்திய விலையுயர்ந்த காரின் புகைப்படத்தை பகிர்ந்து, அவர் இல்லாத வருத்தத்தை பகிர்ந்து கொண்டார்.

‘வி மிஸ் யூ சோ மச் சித்ரா’ என்ற கேப்ஷனுடன் சித்ராவின் ரசிகர் பகிர்ந்த அந்த புகைப்படம் இங்கே.




 
NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...