வில்லி கேரக்டரில் அசத்திய நடிகை பூஜாவா இது? இப்போது எங்கே இருக்கிறார் தெரியுமா?

3 years ago 419

முன்பெல்லாம் வெள்ளித்திரைக்குத்தான் மக்கள் மத்தியில் செம ரீச் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகர், நடிகைகளுக்கே மக்கள் மத்தியில் பெரிய கிரேஸ் இருக்கிறது. 

அவர்கள் தினமும் சீரியல் பார்ப்பதால் வெள்ளித்திரைக்கு இணையாக இவர்களுக்கும் வாய்ஸ் உள்ளது. அந்தவகையில் வில்லி பாத்திரத்தில் அசத்தியவர் தான் நடிகை பூஜா.

தன் 14 வயதிலேயே நடிப்புலகில் சீரியலுக்குள் நுழைந்த பூஜா, சின்னத்திரையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தார். கல்கி தொடரும் இவருக்கு நல்லபெயரை வாங்கிக்கொடுத்தது. 


தொடந்து குடும்பசூழல், தந்தையின் மறைவு ஆகிய கவலைகளினால் பூஜாவுக்கு உடல்நலக்குறைபாடு ஏற்பட்டது. குங்குமம் என்னும் சின்னத்திரை தொடரில் பூஜாவை அறிமுகம் செய்து வாய்ப்பு கொடுத்தது நடிகை குஷ்பு தான். 

அதனால் எப்போதும் நடிகை குஷ்பு மீது உயரிய அபிப்ராயம் கொண்டவராகவே இருந்தார் நடிகை பூஜா. இப்போது சின்னத்திரை தொடர்களுக்கு குட்பை சொல்லிவிட்டு தன் குடும்பத்தோடு பெங்களூரில் செட்டில் ஆகிவிட்டார் பூஜா. 

இப்போது சொந்தமாக யுடீயுப் சேனல் வைத்திருக்கும் பூஜா அதில் மேக்கப் தொடர்பான வீடியோக்களைப் போட்டு லைக்ஸ் அள்ளுகிறார். ஜீ கன்னடம் டிவியிலும் ஸ்டைலிஸ்ட் ஆக வேலை பார்க்கிறார். மீண்டும் சின்னத்திரையில் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்பது அம்மணியின் கனவாம்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...