விவாகரத்து சர்ச்சைக்கு மத்தியில் சினேகா வெளியிட்ட புகைப்படம்!

2 years ago 314

புன்னகை இளவரசி சினேகாவும்- நடிகர் பிரசன்னாவும் விவாகரத்து செய்யவுள்ளதாக வெளியான சர்ச்சைக்கு மத்தியில், சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.


தென்னிந்திய சினிமாவில் நடிகை சினேகா நடிப்பில் உச்சத்தில் இருந்தபோது, தன்னுடன் நடித்த பிரசன்னா மீது காதல் வயப்பட்டு, கடந்த 2012ம் ஆண்டு இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.


இவர்களுக்கு விஹான் என்ற மகனும், ஆத்யந்தா என்ற மகளும் இருக்கின்றனர், குடும்பம், தொழில் என இரண்டையும் சூப்பராக கவனித்து வருகிறார் சினேகா.


இந்நிலையில் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக தகவல்கள் கசிந்தது, இத்தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரொமான்டிக் படத்தை வெளியிட்டார் சினேகா. 


சினிமா நட்சத்திரங்களின் தகவல்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கும் பயில்வான் ரங்கநாதன், சினேகா- பிரசன்னா விவாகரத்து செய்தி வெறும் வதந்தியே என்றும், அதில் துளிகூட உண்மை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.


இதைப்பார்த்த சினேகாவின் ரசிகர்கள் பலரும் அப்பாடா என நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர், 


இதற்கிடையே சினேகா சமீபத்தில நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அதில் சிரித்தபடியே சந்தோஷமாக இருக்கும் சினேகாவின் அழகை வர்ணிக்கத் தொடங்கிவிட்டனர் நெட்டிசன்கள்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...