விவேக் மறைவு குறித்து நடிகை நயன்தாராவின் நெகிழ்ச்சி

3 years ago 259

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் காலமான நிலையில் அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகமும் அஞ்சலி செலுத்தினார்கள்.

பல திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று இறுதி மரியாதை செய்தனர்.

இந்த நிலையில் நடிகர் விவேக்குடன் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, விவேக் மறைவு குறித்து தனது நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை செய்துள்ளார். 

அவர் கூறியதாவது: விவேக் அவர்களுடன் நான் பல ஆண்டுகளாக பணியாற்றி உள்ளேன். குறிப்பாக ’விஸ்வாசம்’ படத்தில் பணியாற்றிய போது அவருடன் இருந்த அற்புதமான நினைவுகளை என்னால் மறக்க முடியாது. 

அதை நினைத்து நான் எப்போதும் மகிழ்வேன். அவர் இவ்வளவு சீக்கிரம் சென்று விட்டார் என்பதே என்பதை நம்பமுடியவில்லை.

வாழ்க்கை என்பது எப்படி கணிக்க முடியாத அளவுக்கு இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். இந்த இழப்பை எதிர்கொள்ள அவர்களுக்கு கடவுள் தேவையான பலத்தை அளிக்க வேண்டுமென இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என்று கூறியுள்ளார். 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...