'வீரபாண்டியன் கட்டபொம்மன்' படத்தின் ஜாக்சன் துரையாக நடித்தவர் காலமானார்..!

3 years ago 296

 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தில், ஆங்கிலேயன், ஜாக்சன் துரையாக நடித்து, அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த நடிகர் சி.ஆர்.பார்த்திபன் இன்று காலமானார்.

90 வயதாகும் இவர், வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

இவரின் மறைவிற்கு திரையுலகை சேர்ந்தவர்கள், மற்றும் ரசிகர்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

வேலூரை சேர்ந்த, சி.ஆர்.பார்த்திபன், பட்ட படிப்பு படிக்க வேண்டும் என்பதற்காக சென்னைக்கு வந்து, எதேர்ச்சியாக கிடைத்தது தான் ஹிந்தி பட சினிமா வாய்ப்பு. 

ஹிந்தியில் தான் அவர் அறிமுகமும் ஆனார். இதன் பின்னரே, தமிழில் நடிகர் சிவாஜி கணேசன் நடித்த 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...