வீல் சேரில் இருந்த டிடிக்கு வாய்ப்பு கொடுத்த பிரபலம்

2 years ago 269

வீல் சேரில் இருந்த டிடிக்கு, பெரிய ஸ்டார்கள் நடித்த படங்களின் ஆடியோ லான்ச்-சை தொகுத்து வழங்கும் வாய்ப்பு எப்படி கிடைத்தது என பிக் பாஸ் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அடுத்த வாரம் கிராண்ட் பினாலே நிகழ இருப்பதால், டைட்டில் வின்னர் யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றர். இதனால் இறுதி வாரத்தில் இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிரபலங்கள் பலரும் வருகை புரிந்து எபிசோடை சுவாரசியமாக்குகின்றன.

அதிலும் இப்போது டிடி பிக் பாஸ் வீட்டிற்கு என்ட்ரி கொடுத்திருக்கிறார். ஆனால் அவர் இரண்டு ஸ்டிக்குகளுடன் நடக்க முடியாமல் ஊனிக் கொண்டே வருவதை பார்த்த ரசிகர்கள் பலரும் கலங்கினார்கள். இவரை பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து அவரை இம்ப்ரஸ் செய்யும் முயற்சியில் இருக்கின்றனர்.

இதில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அவர்களுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட்டும் பெறுகின்றனர். இதைத்தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல சுவாரசியமான தகவலை பகிர்ந்து கொண்டார். பல வருடங்களாக தொகுப்பாளராக இருக்கும் டிடி காலில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு இருப்பதால், அவரால் நீண்ட நேரம் நிற்க முடியாது.

இதனால் சமீப காலமாகவே தொகுப்பாளராக பணி புரிவதை குறைத்துக் கொண்டிருக்கும் டிடி, பெரிய ஸ்டார் ஆடியோ லான்ச் ஒன்றில் ஸ்டிக் உடன் தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். முதலில் அந்த வாய்ப்பு தனக்கு கிடைக்காது என நினைத்துக் கொண்டிருக்கையில், அவர்தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டும் என உலக நாயகன் கமலஹாசன் பரிந்துரைத்திருக்கிறார்.

அதிலும் நாற்காலியில் அமர்ந்து கொண்டு தான் அந்த ப்ரோக்ராமை செய்தேன் என்றும் அது விக்ரம் ஆடியோ லான்ச் என்றும் தற்போது பிக் பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்திருக்கும் டிடி உருக்கத்துடன் பகிர்ந்து கொண்டு உள்ளார். அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் உலகநாயகன் கமலஹாசன் ஒவ்வொரு கலைஞர்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்ளும் நபர்.

அவரால்தான் தனக்கு விக்ரம் மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் மிகப்பெரிய பட்ஜெட் படங்களின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது என்று உருக்கமாக பேசினார். இதைப் பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் ஆண்டவரை சோசியல் மீடியாவில் புகழ்ந்து தள்ளுகின்றனர்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...