வெண்பாவுக்கு காத்திருந்த ஆப்பு – பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

2 years ago 285

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. செல்வா மற்றும் துர்கா என இருவரும் என் பாரதிக்கு எதிராக செய்த வேலைகளை உடைக்க அடுத்து பாரதி கோபப்பட வெண்பா காலேஜில் படிக்கும் போது ஹேமாவை கொன்றதிலிருந்து கண்ணம்மா வீட்டுக்கு பிறந்த குழந்தைகள் வேறு யாருக்கோ பிறந்தது என நம்ப வைத்தது வரை வெண்பா செய்த சூழ்ச்சிகள் அனைத்தையும் சொல்ல மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகிறது.

எனக்கு பிடித்ததை நான் எடுத்துக்குவேன் அப்படி இல்லன்னா பிடிங்கிப்பேன் என கூறுகிறார். எனக்கு வேணும் பாரதி என வெண்பா சொல்லிக் கொண்டிருக்க அப்போது போலீஸ் வந்து யார் போன் பண்ணது என கேட்க ஷர்மிளா நான் தான் உங்களுக்கு போன் பண்ணி பல கொலைகளை செய்த கொலையாளி வெளியில் சுதந்திரமா சுத்திகிட்டு இருக்கா என சொல்லி வெண்பாவை பிடித்துக் கொடுக்க அவள் இது ஒரு சின்ன பிரேக் தான் நான் திரும்ப வருவேன் என சொல்லி கிளம்புகிறார்.

அடுத்து கதறி அழும் பாரதி தன்னுடைய அப்பாவை பிடித்துக் கொண்டு நான் அவளை ஒரு நல்ல பிரண்டா நினைச்சு தான் பழகினேன் ஆனால் என் வாழ்க்கையில ஏன் இப்படி எல்லாம் நடக்கணும் என அழுகிறார். அடுத்து கண்ணம்மாவிடம் சென்று கதறி அழுது மன்னிப்பு கேட்டு காலில் விழுகிறார் பாரதி. கண்ணம்மா எதுவும் பேசாமல் அப்படியே நிற்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...