'சின்ன குஷ்பு' என்று அன்போடு அழைக்கப்பட்ட ஹன்சிகா தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணம் 450 ஆண்டு பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் உள்ள முண்டோடா கோட்டையில் நடந்தது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
சமீபத்தில் ஹன்சிகாவின் திருமணம் 'லவ் ஷாதி டிராமா' என்ற தலைப்பில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது.
வேகமாக வளர ஹார்மோன் ஊசி
இந்நிலையில், ஹன்சிகா வேகமாக வளர அவரது தாயார் ஹார்மோன் ஊசி போட்டிருக்கலாம் என்று பல செய்திகள் பரவி வருகிறது. இதற்கு விளக்கமளித்துள்ள ஹன்சிகா, " எனக்கு 21 வயதாக இருந்த போது இதைப்பற்றி எழுதினார்கள்.
நான் எதைப் பற்றிச் சொல்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும். நான் வளர ஊசி போட்டுக்கொண்டதாக எழுதினார்கள். நான் 8 வயதில் நடிகையானேன். நான் பெண்ணாக வேகமாக வளர எனது அம்மா எனக்கு ஹார்மோன் ஊசி போட்டதாக மக்கள் சொன்னார்கள்" என்று ஹன்சிகா கூறினார்.
தாயாருடன் ஹன்சிகா ஹன்சிகாவின் தாயார் இது குறித்து கூறியதாவது, "இந்தச் செய்தி உண்மையென்றால் நான் டாடா மற்றும் பிர்லாவை விட பணக்காரியாக மாறியிருப்பேன்.
இப்படி எழுதுபவர்களுக்கு பொது அறிவு என்ற ஒன்று இல்லையா என்று எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். நாங்கள் பஞ்சாபிகள். எங்களின் மகள்கள் 12-16 வயதில் வேகமாக வளர்வார்கள்" என்று விளக்கம் அளித்துள்ளார்.