ஷகிலா திடீர் மரணம்?? தீயாக பரவிய தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி... வெளியான உண்மை

3 years ago 1104

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷகிலா. தற்போது கவர்ச்சி வேடங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட ஷகிலா சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களின் மனதை கவர்ந்தார். தொடர்ந்து சின்னத்திரையில் பிசியாகி வருகிறார்.

இந்த நிலையில் மற்றொருவர் ஷகிலா இறந்துவிட்டதாக தகவலை பரப்பி விட பலரும் அவருக்கு போன் செய்து விசாரிக்க தொடங்கியுள்ளனர். இதனை அடுத்து சகிலா வீடியோ ஒன்றை வெளியிட்டு இது குறித்து விளக்கமளித்துள்ளார்.

நான் நலமுடன் ஆரோக்கியத்துடன் நல்ல புன்னகையுடன் இருக்கிறேன். தவறான தகவலை யாரும் நம்ப வேண்டாம். இதன்மூலம் உங்களின் பார்வை என் மீது மீண்டும் திரும்பியுள்ளது. இதற்கு காரணம் தவறான தகவலை பரப்பிய அந்த நபர் தான். அவருக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...