ஷிவானி நாராயணன் வீட்டுக்கு வந்த புதிய உறுப்பினர்... யார் தெரியுமா?

3 years ago 434

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஷிவானி நாராயணன் சிங்கப்பெண்ணாக வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

குறிப்பாக கமல்ஹாசன், விஜய் சேதுபதி நடித்து வரும் ’விக்ரம்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் ஷிவானி நாராயணன் பல கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருவார்.


அந்த வகையில் அவர் தனது வீட்டிற்கு புதிய உறுப்பினர் ஒருவர் வந்திருப்பதாக அறிவித்துள்ளார்.

அதுதான் அவர் புதிதாக வளர்க்க இருக்கும் செல்ல நாய் குட்டி. ஏற்கனவே அவர் இரண்டு நாய்க் குட்டிகளை வளர்த்து வரும் நிலையில் தற்போது புதிய நாய்க்குட்டி ஒன்று வாங்கி வளர்க்க உள்ளார்.

அதை கையில் தூக்கி வைத்துக்கொண்டு காட்டும் புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...